ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் திலங்க எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் , நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால எந்தவிதமான பதவியையும் வகிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் முன்னாள் தலைவர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் சட்டத்தின் 39(3)ம் பிரிவின் கீழ் திலங்க எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலங்கவிற்கு, ஊழல் மோசடிச் சம்பவமொன்று தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.