நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு நான்கரை வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திகளை முன்னிறுத்தி மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகளில் வடக்கை மாத்திரமே முன்னிலைப்படுத்தி கிழக்கை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுக்கொண்டிருக்கின்றது.
அவற்றையே பிரச்சாரமாக பயன்படுத்தி வந்த அரசாங்கமும் வடக்கினை மட்டும் முன்னிறுத்தி கிழக்கைப் புறக்கணித்து சூழ்ச்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு என்பதை சம அளவிலேயே பார்க்க வேண்டும், சம அளவிலேயே சேவைகளும் செய்ய வேண்டும்.
ஆனால் இன்றளவில் மட்டும் கிழக்கின் அழிவுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருக்கின்றதே தவிர ஆக்கபூர்வமான எவ்வித நடவடிக்கைகளும் கிழக்கில் முன்னெடுக்கப்படவில்லை.
அது தொடர்பான விசேட தொகுப்பு இதோ,