சுதந்திரக் கட்சியின் 99 வீதமானவர்கள் கோத்தாவையே எதிர்பார்க்கின்றனர்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 99 வீதமானவர்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையே எதிர்பார்க்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொடகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மலர்மொட்டு சின்னம் இலங்கை முழுவதிலும் வியாபித்துள்ளது, தற்பொழுது மலர்மொட்டுச் சின்னத்தை கைவிட்டு புதிய சின்னமொன்றுக்குச் செல்ல முடியாது.

ஊரில் இருக்கும் 99 வீதமான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென கோருகின்றனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.