சமூகம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் அமைச்சர் திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நான் சமூகம் சார்ந்த அரசியலையே முன்னெடுத்து வருகின்றேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - நானுஓயா நாவலர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற வள நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

நான் பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. நான் சமூகம் சார்ந்த அரசியலையே முன்னெடுத்து வருகின்றேன்.

எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனி வீட்டுத் திட்டம், அதற்கான காணி அவற்றுக்கான உறுதிப் பத்திரங்கள், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள், மலையகத்துக்கான தனியான அபிவிருத்தி அதிகார சபை என பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் என்மீது விமர்சனம் செய்கின்றவர்கள் இல்லாமல் இல்லை.

எனினும், அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் எனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.