பிரதமர் ரணிலுடன் பேசியது என்ன? அமைச்சர் சஜித் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

தனக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக இடம்பெற்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் அலரி மாளிகையில் இன்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் நிறைவில் அலரி மாளிகை வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம். ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.

இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers