ஜனாதிபதியை சுற்றிவளைத்த கும்பல்! தப்பி வந்த மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

பொலநறுவையிலுள்ள தனது வீட்டை ஆர்ப்பாட்டக்கார்கள் சுற்றி வளைத்தமையினால் அங்கிருந்து தப்பி வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி இருந்தும் நியமிக்கப்படாதவர்களினால் தனது வீடு சுற்றிவளைக்கப்பட்டது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தகுதியானவர்களுக்கு உரிய நியமனம் வழங்கப்படும், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என அவர்களிடம் தெரிவித்தேன்.

இந்த சம்பவம் கடந்த வாரம் எனது வீட்டில் நடைபெற்றது. கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கெக்கிராவ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டார்.