நீதிமன்றில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரதியமைச்சர்!

Report Print Vethu Vethu in அரசியல்

மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று நீதிமன்றில் ஆஜரானார். இதன்போது அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றம் அவருக்கான தண்டனை உத்தரவை பிறப்பிக்கும் வரை அவர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள சிறிய இடம் ஒன்றில் உறங்கியுள்ளார்.

மத்துகம பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் சடலம் ஒன்றை புதைத்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

தோட்ட முகாமையாளர் சடலத்தை புதைக்க நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவும் பெறப்பட்டிருந்தது. அதை மீறி சடலத்தை புதைத்த விவகாரத்திலேயே பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது வழக்கு விசாரணை எடுக்க தாமதமாகியமையினால் நீதிமன்றத்தின் வளாகத்தில் அவர் உறங்கியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Latest Offers