கோத்தபாயவை தோற்கடிக்கக் கூடிய அரசியல் பிரபலம் யார்? ஆய்வில் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தோல்வி அடைவார் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிற்கமைய இந்த வியடம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி பேராசிரியர் சிசிர பின்னவல தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிட்டால் அவர் மூன்றாம் இடத்தை பிடிப்பார் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட குழுவினரால் நாடு முழுவதும் 8 பிரிவுகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது கரு ஜயசூரிய 7 பிரிவுகளிலும், சஜித் பிரேமதாஸ 4 பிரிவுகளிலேயே முன்னணி வகித்துள்ளனர்.

கொழும்பு, மற்றும் நாட்டின் பிரதான பிரதேசங்களிலும், மலையகம், வடக்கு, கிழக்கு, முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களிலும், தெற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலும் கரு ஜயசூரியவினால் வெற்றி பெற முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்காமல் இருப்பது, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அந்த கட்சியில் பிளவு ஏற்படாது, சிறுபான்மை வேட்பாளர்கள் எவரும் போடியிடாமல் இருத்தல் ஆகிய 3 விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers