மைத்திரியின் செயலால் பதவி விலக தீர்மானித்துள்ள அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

தனது அமைச்சின் கீழ் இருந்த தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் தனது தீர்மானம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரரான ருவான் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் பதவியை வகிப்பது, நெறிமுறைக்கு முரணானது என சில ஊடக அமைப்புகள், அவர் அமைச்சராக பதவியேற்ற போது தெரிவித்திருந்தன.

எனினும் தான் பங்குதாராக இருக்கும் பத்திரிகை நிறுவனம் வெளியிடும் தேசிய பத்திரிகை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் போது, அமைச்சர் ருவான் விஜேவர்தன அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.

அத்துடன் தனது அமைச்சின் கீழ் உள்ள செலசினே நிறுவனம், எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதை நிறுத்த நீதிமன்றத்திற்கு சென்ற போது, அதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் ருவான் விஜேவர்தன எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.