ரணிலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஜித்தின் தாய் ஹேமா

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமை குறித்து இவர்கள் கலந்துரையாடியதாக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச எந்த வகையிலும் கட்சியை விட்டு செல்ல மாட்டார் எனவும் அவரை சுற்றியிருப்பவர்கள் அதற்காக தூண்டி வருவதாகவும் ஹேமா பிரேமதாச, பிரதமர் ரணிலிடம் கூறியதாக தெரியவருகிறது.