சஜித் எந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் தோல்வியடைவார்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாச எந்த கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் தேர்தல் முடிவில் அவர் தோல்வியடைந்த வேட்பாளராக மாறுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச எந்த தூரநோக்கு பார்வையும் இல்லாத நபர். சஜித் பிரேமதாச என்பவர் அன்றாடம் பணியாற்ற கூடிய அறிவை மட்டுமே கொண்டுள்ள தலைவர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றுமையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நன்மையாக இருக்கும்.

அதேவேளை அதிகமான திருடர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே பாதுகாத்தார் எனவும் ஷெயான் சேமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers