ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 42ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை சம்பந்தமாக விசேட அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, வடக்கு மெசிடோனியா, மென்டினீக்ரோ ஆகிய நாடுகள் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தமாக இலங்கை அரசு எடுத்த சாதகமான பல நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நிறைவேற்ற வேண்டிய பல வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக இந்த நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசு இந்த நியமனத்தை வழங்கியிருக்கக் கூடாது எனவும் இந்நாடுகள் கூறியுள்ளன.

இதனை தவிர, 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் சம்பந்தமான இலங்கை அரசு இன்னும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.