கஷ்டமான நேரத்தில் சீனா இலங்கையுடன் இருக்கும்: சீன பாதுகாப்பு ஆலோசகர்

Report Print Steephen Steephen in அரசியல்
25Shares

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் க்ஷூ ஜியன்வெலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

எந்த கஷ்டமான நேரத்திலும் சீனா இலங்கையுடன் இணைந்திருக்கும் என சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ தளபதியிடம் கூறியுள்ளார்.

அதேவேளை சீனாவுடனான தொடர்புகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும் என சவேந்திர சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின் இறுதியில் இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளதாக இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.