ரூபவாஹினி நெருக்கடி நிலையை நோக்கியே செல்கிறது: ருவான் விஜேவர்தன

Report Print Ajith Ajith in அரசியல்

அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நெருக்கடி நிலையை நோக்கி செல்கிறது என்று அமைச்சரவை அந்தஸ்து அல்லாத வெகுஜன ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரூபாவாஹினி 2014 முதல் நஷ்டத்தில் இயங்குகிறது, 2018 இல் இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

ரூபாவாஹினியின் தலைமை நிர்வாகத்தை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டேன், எனினும் அந்த முயற்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடுக்கப்பட்டன.

ரூபாவாஹினி தொழிற்சங்கங்களும் அதன் ஊழியர்களும் தொலைக்காட்சி நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றி, அமைப்பை மறுசீரமைப்பதற்கும், அதிக இலாபம் ஈட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிற்கு கீழ் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.