ஒழுக்காற்று நடவடிக்கைகளை அமைச்சர்கள் எடுக்க முடியாது!

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளை அமைச்சின் செயலாளர்களே மேற்கொள்ள முடியும் எனவும், அமைச்சர்கள் மேற்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் பணிப்பாளர் இளங்கசிங்க மீது விசாரணை மற்றும் மிரட்டல் விடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்தார்.

இந்நிலையிலேயே ஆணைக்குழு அமைச்சின் செயலாளர்களே விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சரின் வண்ண புகைப்படங்களுடன் கூடிய பாட புத்தகங்களை அச்சிடுவது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சாட்சியமளித்த பின்னர் கல்வி அமைச்சின் பணிப்பாளர் இளங்கசிங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான ஆணையத்தின் விசாரணையின்போது, அமைச்சரின் வண்ண புகைப்படங்கள் அவரது அறிவுறுத்தலின் பேரில் பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டிருப்பதாகவும், இதனால் அமைச்சிற்கு பாரிய செலவினங்களை ஏற்படுத்தியதாகவும் இளங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers