குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Report Print Ajith Ajith in அரசியல்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சட்ட விவகாரங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவினால் (எஸ்ஓசி) மேற்கொள்ளப்பட்டுள்ள சில திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த சட்டத்தை திருத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஜூன் மாதம், வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன் துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஆராயப்படும் நிலையில் இன்று அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வர்த்தமானி அல்லது தீர்மானங்களும் துறைசார் மேற்பார்வைக் குழு ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.