ரணில் - சஜித் சந்தித்து பேச்சு! அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள விடயம்

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவு தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பம் வெளியிட்டுள்ளனர். எனினும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரிவித்து, அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதமர் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், மக்கள் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் நேற்று இரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் பெறக்கூடிய ​வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமது கட்சி உள்ளது. சிறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானம், ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் கூட்டப்படும் போது அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும் போது அது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய ஒருவர் தேர்தலுக்காக களமிறக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ள ஏனைய சிறு கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.