அடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்! மொட்டு அவசியமில்லை

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்தக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்தநிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பைக்கையிலெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதற்காக அனைவரும் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் குறித்தவொரு கட்சியின் சின்னத்தை மாத்திரம் பயன்படுத்தாது பொதுச் சின்னத்தைத் தெரிவு செய்வதே பொறுத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.