கைதிகளின் மறுவாழ்வுக்காக தொழில்திறன் மற்றும் பயிற்சி மையங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

கைதிகளின் மறுவாழ்வுக்காக இரண்டு தொழில் திறன் மற்றும் பயிற்சி மையங்கள் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த திட்டங்களை நிர்மாணிப்பதற்காக திறைசேரியில் இருந்து சிறைச்சாலைத் துறைக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

அம்பேபுஸா மற்றும் வீரவிலா சிறைகளில் கிபூட்ஸ் முறையில் பண்ணைகள் அமைக்க இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையில் பண்ணைகளுக்குப் பதிலாக வீரவிலா மற்றும் எம்பிலிபிட்டி சிறைகளில் விவசாய மற்றும் தொழில்திறன் மையத்தை அமைக்கும் திட்டத்தை நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.