இனி இழுத்தடிப்புக்கு இடமில்லை, முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன்! சஜித் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பில் இனியும் இழுத்தடிப்புக்கு இடமில்லை, அதேபோல் நான் முன்வைத்த காலை பின்வைக்கப் போவதும் இல்லை."

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான் நேரில் கூற வேண்டியவற்றைக் கூறிவிட்டேன். அவரும் என்னிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டார்.

எனது நிலைப்பாட்டிலிருந்து நான் மாறமாட்டேன். எனக்குச் சாதகமான நிலைமை வரும் என்றே கருதுகிறேன். இன்னும் சில தினங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான செய்திகள் அறிவிக்கப்படும்” என்றார்.