ராஜிதவின் வீட்டில் முகாமிட்டுள்ள ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள்!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்றைய தினமும் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கொழும்பிலுள்ள வீட்டில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய அரசியல் கூட்டணி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.