விவசாயியை ஜனாதிபதியாக்கிய ரணில்! செயற்குழு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் இறுதித் தீர்மானம் கட்சியின் செயற்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸு மாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சினேகபூர்வமாக நிறைவு பெற்றது.

கட்சியை வெற்றிபெறச் செய்யக்கூடிய வேட்பாளர் ஒருவர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாம் சுமுகமாக பேசினோம். விரைவில் வேட்பாளரை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். சனி, ஞாயிறு தினம் அளவில் தீர்வொன்றைப் பெற முடியுமென நம்புகிறோம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவரும் சேர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை எவ்வாறு வெல்ல வைப்பது என்றே பேசினோம். கட்சியைப் பலப்படுத்தி, பின்னர் வேட்பாளரை முடிவு செய்வோம் எனத் தீர்மானித்தோம்.

இது குடும்பத்தின் பிரச்சனை அல்ல. மறுபுறத்தில் இருப்பது குடும்பப் பிரச்சனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி என்பது தொழிலாளியை ஜனாதிபதியாக்கிய கட்சி. ஒரு விவசாயியை ஜனாதிபதி பீடத்தில் அமர வைத்த கட்சி. இறுதியில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளனர்.

Latest Offers