ஜனாதிபதி வேட்பாளர் பதவியை மாத்திரம் தனக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொடர்ந்து பிரதமர் பதவியிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் நீங்களே (ரணில்) செயற்படுங்கள் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எனினும் சஜித் பிரேமதாஸவின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் 15 பேரில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர், சஜித்திடம் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளார். சிலர் இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் வாக்குறுதிகளையும் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இதனை அறிந்தமையினால் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனை தொடர்பில் எந்த அவதானத்தையும் செலுத்தவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.