ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட எதிர்பார்க்கும் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் சுமூகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், பிரதமர் தெற்கில் அதிகபட்சமாக சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற முடியும் என்ற சாத்தியமற்ற நம்பிக்கையை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி (யு.என்.எஃப்), சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பெருந்தோட்டத்துறை அரசியல் கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் அரசியல் கூட்டணியாக போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.