அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்: மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏற்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ள மார்ச் 12 அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் ரோஹன ஹெட்டியராச்சி,

அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்தும் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் விதத்தை அறிவதே இதன் நோக்கம்.

மக்களுக்கும் வேட்பாளருக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இப்படியான வேலைத்திட்டம் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.

ஒரே மேடைக்கு அழைக்கப்படும் வேட்பாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேட்க வேண்டிய 5 கேள்விகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அனுப்பி வைக்குமாறும் மார்ச் 12 அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.