சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கையினை ஒத்தி வைத்த ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

பதவிக் காலம் தொடர்பில் சட்ட விளக்கும் கோரும் நடவடிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்தி வைத்துள்ளார்.

தனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்தியாகின்றதா என்பது குறித்து உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கும் கோரும் முனைப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்தார்.

கடந்த 10ஆம் திகதி இந்த சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருந்தது.

எனினும், இறுதி நேரத்தில் ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டு சட்ட விளக்கும் கோரும் நடவடிக்கையை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் பொருத்தமான நேரத்தில் இந்த சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஓர் வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றி அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers