வெற்றி பெற முடிந்தால் வருவேன்: முடியாவிட்டால் சென்று விடுவேன் - பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

கஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியை பாதுகாத்த தலைவர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால், போட்டியிடுவதாகவும் அதனை செய்ய முடியாது போனால், வெளியேறி விடுவேன் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

70 வயது வரை இலங்கை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது என்பது பெரிய சிரமமான காரியமல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

பியகம மற்றும் களனி தொகுதிகளை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் அண்மையில் நடந்த சந்திப்பில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கு பின்னால் ஒருவராக இறந்து விழுந்த போது, கட்சியின் தலைவர் பதவியை ஏற்று கஷ்டமான காலத்தில் செயற்பட்ட விதத்தையும் பிரதமர் இதன்போது நினைவூட்டியுள்ளார்.

கட்சி வீழ்ச்சியடைந்த சமயங்களில் அதனை கட்டியெழுப்பிய விதத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சியையும் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியையும் வெற்றி பெற செய்வது கடமை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இதனை செய்ய முடியாது போல், கட்சியில் இருந்து வெளியேறுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.