வெற்றி பெறும் வழிமுறைகளை உருவாக்க குழுவை நியமித்த பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் ஜனநாயக தேசிய முன்னணி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பிரதமர் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் கருத்துக்களை பெற்றுக் கொள்ள உள்ளனர்.

இதனையடுத்து உருவாக்கப்படும் வழிமுறைகள் இந்த வார இறுதியில் பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடந்த சந்திப்பை அடுத்தே தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.