அடுத்த சில தினங்களில் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்? பலமாக நம்பும் அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாச அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பலமாக நம்புவதாக அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், எப்பாவளவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கம் என்ன செய்தது என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர். அரசாங்கம் பிரச்சாரத்திற்கு தேவையில்லாமல் பணத்தை செலவிடாவிட்டாலும் அமைதியாக நாட்டுக்கு பாரிய சேவையை செய்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் பெரிய வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளோம். யார் என்ன கூறினாலும் தற்போதைய அரசாங்கம் நாட்டில் மிகப் பெரிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

செய்து முடிக்க முடியாத திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை. எதிர்காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவாகி, நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதுடன் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை வலுவாக முன்னெடுத்து செல்ல எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

சஜித் பிரேமதாச இளம் தலைவர், அவர் இன்னும் பல ஆண்டுகள் நாட்டின் தலைவராக இருந்து பாரிய வேலைத்திட்டங்களை செய்ய முடியும்.

இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசியுடன் கரு ஜயசூரியவின் வழிமொழிவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பவார் என குறிப்பிட்டுள்ளார்.