புறக்கணிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்! ஜனாதிபதி வேட்பாளர் அநுர

Report Print Gokulan Gokulan in அரசியல்

மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழில்புரியும் மக்களின் சந்திப்பு எனும் கருப்பொருளின் கீழ் சுகததாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் கட்சியின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் வருமானத்தில் பாரிய பங்களிப்பை மலையகத்திலுள்ள தோட்டப்புற தொழிலாளர்கள் செய்கிறார்கள்.

என்ற போதும் அவர்கள் பெரும்பாலான விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் பெருமளவில் இருக்கின்றன. எனினும் இதுவரையில் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க யாரும் முயற்சிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.