சுகாதார அமைச்சருக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் இன்று பகல் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்களின் அதீத தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, வைத்தியர்களிடம் மாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சுமார் 45 வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.