ரணிலுக்கு வெற்றியா? இரகசியம் வெளியானது

Report Print Gokulan Gokulan in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் இணைந்து கொண்ட பின்னரே அவர் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு தாம் இணைந்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் பிரதமர் பல சாதனைகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பல தோல்விகளை சந்தித்திருந்தாலும் நான் அவற்றை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. நான் எந்த தேர்தலிலும் வெற்றிப் பெற்றதுமில்லை.

இருந்தாலும் ரணில் எத்தனை வெற்றிகளை பெற்றுள்ளார் என நாம் அறிவோம். எனவே நாம் கருத்திற் கொள்ள வேண்டியது என்னவென்றால் அவ்வளவு வெற்றிகளை பெற்ற ரணிலே தேர்தலில் வெற்றிப் பெறுவார் என்பதையும் அவ்வாறு இல்லாமல் கொலைக்காரா்கள் தேர்தலில் வெற்றிப் பெறப் போவதில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.