எழுக தமிழ் நிகழ்வில் அனைவரையும் ஒன்றிணையுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு!

Report Print Sumi in அரசியல்

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெற உள்ள மாபெரும் மக்கள் எழுச்சி, எழுக தமிழ் நிகழ்விற்கு கட்சி பேதம் பாராது அனைத்து தமிழ் மக்களையும் யாழ். முற்றவெளியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 16ம் திகதி தமிழ் மக்களுக்கான உரிமைக்குரலாக மேற்கொள்ளப்படுகின்ற எழுக தமிழ் நிகழ்விற்கு கட்சி பேதம் பாராது வடக்கு-கிழக்கில் உள்ள அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Latest Offers