நிச்சயம் எனக்கு ஆதரவு கிடைக்கும்! அமைச்சர் சஜித் வெளியிட்டுள்ள நம்பிக்கை

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் முழு ஆதரவும் தனக்கு கிடைக்கும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதற்காக அவர்களிடம் பேச்சு நடத்துவதற்கான தேவை கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீட மகா விகாரைக்கு நேற்றைய தினம் அமைச்சர் சஜித் பிரேமதாச விஜயம் செய்திருந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பொறுப்பு கிடைக்குமா இல்லையா என்பதை எனக்கும், ஊடகவியலாளர்களுக்கும் முடிவுசெய்ய இயலாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

மக்கள் பொறுப்பினை வழங்கிய பின்னரே அதுகுறித்து தெளிவாக பேசமுடியும். எனக்கு வழங்கப்படும் சவால்களை நான் புறம்பே தள்ளியதில்லை.

நான் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நிகழ்கால சவாலான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதாலும். அதனைவிடுத்து பிரேத சபைத் தேர்தல் அல்ல.

நாட்டின் மக்களின் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவுசெய்கின்ற சவால்தான் தற்போது இருக்கின்றது.

இன்று போய் நாளை வா என்கிற தோஷம் இருப்பதாக சிலர் விமர்சனம் முன்வைக்கலாம். பலவந்தம் இடம்பெறாது என்றும் சிலரால் கூறலாம்.

ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை, சகோதரத்துவம், ஐக்கியத்துடன் பிரச்சினையை தீர்ப்பதே சிறந்த கிரமமாகும். இதுதான் உலகம் ஏற்றுக்கொள்ளும் முறைமை, நூதன முறைமையாகும்.

அந்த முறைமை இருக்கும்போது கட்டளைப் பிரயோகங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியான சிந்தனையை வெற்றிபெற வைப்பற்கு முயற்சிக்கக்கூடாது.

வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை முடியும்வரை அவர்தான் வேட்பாளர் இவர்தான் வேட்பாளர் என்று கூறமுடியாது. பலருக்கும் பலவித கேள்விகள் இருக்கின்றன.

ஆனாலும் நாட்டு மக்களின் கேள்விக்குத் தலைசாய்க்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்.” என மேலும் தெரிவித்துள்ளார்.