பிரதமர் பதவி காரணமாக மைத்திரி, மஹிந்த தரப்பு பேச்சுவார்த்தையில் நெருக்கடி?

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் பதவி தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கூட்டணியின் சின்னம் காரணமாக இழுபறி நிலையில் காணப்படுவதாக கூறப்பட்ட போதிலும் உண்மையில் பிரதமர் பதவி தொடர்பிலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் தமது அரசாங்கத்தில் செயற்படுவர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

எனினும், பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என மைத்திரி தரப்பு கூறி வருவதாகவும், இதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளதாகவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers