ஜனாதிபதி தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்பட கூடிய சாத்தியம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசாங்க அச்சகரை அழைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான சகல விளம்பரங்கள், வாக்குச் சீட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்கள் அச்சிடுதல் மற்றும் தேவையான கடதாசிகளை ஆயத்தப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் வேட்பு மனு கோருதல் தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்துதல் மற்றும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளல் ஆகிய இரண்டும் ஒரே வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.