சாலிந்த திஸாநாயக்கவின் இடத்திற்கு சாந்த பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரையை நேற்று கடிதம் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை நியமிக்காமை தொடர்பாக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சாந்த பண்டார அண்மையில் கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க அண்மையில் உடல் நல குறைவினால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத்தை நியமிக்க குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது என சாந்த பண்டார கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாந்த பண்டார, வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

Latest Offers