மகிந்த தரப்புடன் இணையும் மைத்திரி தரப்பின் முக்கியஸ்தர்களை கொண்ட அணி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா ஒரு அணியுடன் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வரும் அவர், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என தெரியவருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பான பிரச்சினையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சீர்குலைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 68ஆவது மாநாடு கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் இன்னாள் ஜனாதிபத மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு நடுவிலிருந்து ஆசனத்தில் நிமல் சிறிபாலடி சில்வா அமர்ந்திருந்தார்.

இதிலிருந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் நிமல் சிறிபாலடி சில்வாவின் இடம் எவ்வளவு முக்கியமானது என புலப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.