ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் மனோ வெளியிட்டுள்ள தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும், 17, 18, 19ஆம் திகதிகளுக்குள் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் றிசார்ட் பதியூதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்து, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தி, ஜனநாயக தேசிய முன்னணியின் என்ற புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

நாடு கோரும் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி, நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

இதனையடுத்து, பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் அவற்றிலும் ஜனநாயக தேசிய முன்னணி வெற்றி பெறும் என்பதுடன் அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்றும்.

மேலும் உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தி அந்த சபைகளையும் புதிய கூட்டணி கைப்பற்றும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.