பொதுஜன பெரமுனவுடன் இணையும் மைத்திரி அணி? எனக்கு பொருந்தாது என்கிறார் சந்திரிக்கா

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்து தீர்மானம் எடுத்துவருகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இம்முறை வெற்றி பெற முடியாது போனாலும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்திருந்தால், அடுத்த முறை வெற்றிக்காவது அது வழியமைக்கும்.

அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும் எனவும், கட்சியின் வாக்குகளை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். இருப்பினும், கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்து தீர்மானம் எடுக்கின்றது.

மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் நோக்குடனே பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நடவடிக்கைகள் எனது கொள்கைக்கு பொருந்தாது. அதனால் அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு நான் ஒருபோதும் கலந்துகொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers