மைத்திரி, சாகல ஆகியோரின் அதிகாரங்களை உபயோகித்தவர் இவரா?

Report Print Gokulan Gokulan in அரசியல்

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்ணாண்டோவை அந்த பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்தத் தீர்மானத்தை தாம் விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்தக் காலங்களில் நாட்டில் பொலிஸாருக்கு கட்டளைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிறப்பித்தார். சில கட்டளைகள் என்ன என்பதைக் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருக்கவில்லை.

பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சராக சாகல ரத்னாயக்க இருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அனைத்து முக்கிய அதிகாரங்களையும் மேற்கொண்டார்.

சாகல ரத்னாயக்க மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பிரதமரின் கை பொம்மைகளாகவே காணப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.