ராஜபக்ச குடும்ப திருமணத்திற்காக திறக்கப்பட்ட வீதி

Report Print Steephen Steephen in அரசியல்

இதுவரை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படாத தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான பகுதியின் பெலியத்தை வரை வாகன போக்குவரத்துக்கு நேற்றிரவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோரின் திருமண வைபவத்தில் கலந்துக்கொள்ளும் விருந்தினர்கள் பயணிப்பதற்காக வீதி திறக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இந்த பகுதி கடந்த மாதம் திறந்து வைக்கப்படவிருந்த போதிலும் திறந்து வைக்கப்படவில்லை.

வீரக்கெட்டிய மெதமுலனவில் நேற்றிரவு நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.