ஜனாதிபதியின் காரைப் பயன்படுத்தும் ஐ.தே.கவின் பிரபலம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ வாகனத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் சஜித் பிரேமதாசவின் அதிகாரபூர்வ வாகனம் பழுதடைந்துள்ளது.

இதனால் அவர் முச்சக்கர வண்டியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று அங்கிருந்து ஜனாதிபதியின் வாகனத்தைப் பெற்றுக் கொண்டு தனது பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது ஜனாதிபதியின் வாகனத்தில் ஜனாதிபதியுடனேயே சஜித் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த அமைச்சரவைக் கூட்டம் மற்றும் நேற்றைய தினம் நடைபெற்ற கலாச்சார அமைச்சின் நிகழ்வின் போதும் ஜனாதிபதியுடன் சஜித் பிரேமதாச வந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் இணைந்து சஜித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த தகவல்களை ஜனாதிபதியோ அல்லது சஜித் தரப்போ இதுவரையில் உறுதி செய்யவில்லை.