பச்சைகொடி காட்டிய முஸ்லிம் காங்கிரஸ்! முரண்டு பிடிக்கும் கூட்டமைப்பு! தீவிர முயற்சியில் சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்

சிறுபான்மை கட்சிகளை சந்தித்து தனக்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் உடன்பாடுகளை எட்டுவதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிய வருகிறது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் எழுத்துமூலமான ஒப்பந்தம் ஒன்றை கூட்டமைப்பு கோரி வருவதாகவும், சஜித் பிரேமதாஸ அதற்கு இன்னும் உடன்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் கட்சியின் தலைமைக்கும் மாற்றுக்குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் சிறுபான்மை கட்சியின் ஆதரவினை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்கப்பாட்டினை பெற்றால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க தயார் என, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.