யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்பதை கூறும் அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை போல், எந்த அரசாங்கமும் நாட்டின் அபிவிருத்திக்காக பணத்தை செலவிடவில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தூரநோக்குள்ள தலைவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற செய்ய தான் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜா-எல உதம்விட்ட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். அதனை அவ்வாறு பார்க்கக் கூடாது. இம்முறை நமக்கு தேவையான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

இல்லையெனில் நாட்டுக்கு மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படும். கடந்த முறையும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என எதிர்பார்த்தோம்.

நாங்கள் நாட்டுக்கு போதுமான வேலைகளை செய்துள்ளோம். யார் என்ன சொன்னாலும் தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு வேலைகளை செய்துள்ளது.

இது போன்று எந்த அரசாங்கமும் செய்ததில்லை. குறைகள் இருக்கலாம். எமது அரசாங்கத்தை போன்று கிராமங்களுக்கு சென்று எந்த அரசாங்கமும் அபிவிருத்திகளை செய்யவில்லை.

இனவாதம், மதவாதம் அற்ற, நாட்டை மீண்டும் ஒரு போருக்கு இட்டுச் செல்லாத ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers