சுதந்திரக் கட்சி வேட்பாளரை நிறுத்துவது தடையாக இருக்காது: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த தீர்மானித்திருப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை சம்பந்தமாக இரண்டு கட்சிகளும் இன்னும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்பதால், தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த போவதில்லை என்று கூறினால், அந்த கட்சி அத்துடன் முடிந்து விடும். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை செய்ய வேண்டும்.

நான் அந்த கட்சியில் இருந்தாலும் வேட்பாளரை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கியிருப்பேன். இதனால், சுதந்திரக் கட்சியின் தீர்மானம் பொதுஜன பெரமுனவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு தடையில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை நிற நிழல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது மீண்டும் விழ ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் என நம்புவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.