தோல்விக்கான பொறுப்பை பொதுஜன பெரமுன ஏற்க வேண்டும்: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டணிக்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

ரணில், சஜித் ஆகியோருடன் மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை. பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இதன் போது சிறப்புரிமைகள், பதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை. பிரதான விடயமாக கட்சியின் அடையாளத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இந்த விடயங்களுக்கு இணங்கியதும் தேர்தல் பணிகளில் ஈடுபட தயாராக இருக்கின்றோம். வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு இவை தடைகளாக இருக்காது.

பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக உள்ளது. இப்படியான கதைகளை நிறுத்தி விட்டு பொறுப்புடன் செயற்பட்டு, வெற்றி பெற வேண்டும்.

அறிக்கைகளை வெளியிட்டு மற்ற அணியினரை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி அல்லது பிரதமரை வெற்றி பெற தயாராகவில்லை. இதனால், பொறுப்புடன் உணர்வுபூர்வமான பொதுஜன பெரமுனவினர் பேச வேண்டும். இல்லை என்றால் தோல்விக்கான பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.