பிரதமருக்கும் தமிழ்நாட்டில் உள்ள கட்சியொன்றின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

Report Print Malar in அரசியல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரதமரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசியல் பிரமுகர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.