ரணிலின் அரசியல் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! ஏன் இந்த முடிவு?

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகவும் கச்சிதமாக பங்காளிக் கட்சியின் தலைவர்கள் பக்கம் நகர்த்தியிருக்கின்றார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பிரதான பங்கு வகிக்கும், அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பிரதானமான பங்கு வகிக்கப்போகின்றது.

நாளையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்பதில், தனது முடிவை எவ்வாறு அறிவிக்கும் என்பது பல்வேறு தரப்பினரிடமும் வினாவாகவே இருந்து வருகின்றது.