வேலைகளை செய்ய சர்வாதிகாரம் அவசியமில்லை: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டுக்கு வேலை செய்ய சர்வாதிகாரம் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் எத்தனை வீடுகள் வழங்கப்படுகின்றன. அன்று குதிரை பந்தய திடலில் பாதைகள் அமைக்கப்பட்டன.

நாங்கள் வறிய மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து, ஜனநாயகத்தை போலவே வீடுகளையும் வழங்கினோம். இதனால், வேலைகளை செய்ய சர்வாதிகாரம் தேவையில்லை.

திறமை இருந்தால் போதும். சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும் அதிகமான வேலைகளை செய்ய முடிந்தது.

பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கம் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.